கொரோனா ஊரடங்கால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்களின் கல்வி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் இணையதளம் வழியாக கல்வி சார்ந்த விஷயங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகிய உடனே உயர்கல்விக்கு ( பொறியியல் கல்லூரிக்கான) விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து மாணவர்கள் இணையம் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனர்.பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இன்று மாலை 6 மணிக்குள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புக்ளுக்காக நேற்று மாலை வரை 1.58 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.