கொரோனா கால ஊரடங்கு பொதுமுடக்கத்தால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அப்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சான்றிதழ் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் வழங்கப்பட உள்ளது. அதில் ஏதேனும் பிழை இருந்தால் தலைமை ஆசிரியரே திருத்தங்களை செய்து சான்றோப்பமிட்டு வழங்க வேண்டும். சான்றிதழ்கள் வழங்கும் போது அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.