இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் தங்களது சோகத்தை டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். தோனியை இனி இந்திய அணிக்காக பார்க்க முடியாது, ஆனால் சென்னை அணிக்காக பார்க்க முடியும் என்ற கருத்துக்களையும் நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தோனி ஓய்வு அறிவித்து குறித்து அவரது மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் மிகத் தீவிரமாக நீங்கள் காதலிக்கின்ற கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் போது எவ்வளவு கண்ணீரை கட்டுப் படுத்திருப்பீர்கள் என்று நான் அறிவேன். நீங்கள் உருவாக்கிய உணர்வுகளை மக்கள் மறக்க மாட்டார்கள் என்று மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CD60JnWHibP/?utm_source=ig_web_copy_link