Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு அதிகாரம் – பிரதமர் மோடி உரை …!!

சுயசார்பு என்பது ஒவ்வொரு இந்தியரின் தாரக மந்திரமாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

நாட்டின் 74வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஒரே நாடு என்ற ஒற்றுமையுடன் நாம் சவால்களை வெல்வோம் என்றும், இந்தியர்கள் ஒருபோதும் தியாகத்திற்கு அஞ்சியது இல்லை என்றும் தெரிவித்தார். வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடி வரும் முன்கள பணியாளர்கள் அனைவரும் தலை வணங்குகிறேன் என்றும், வைரஸ்க்கு எதிரான போரியில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என்றும் அவர் தெரிவித்தார். சொந்தக் காலில் நிற்கும் படி பெற்றோர் அறிவுரை கூறுவது உண்டு, இன்று நாம் சுயசார்புடன் சொந்தக் காலில் நிற்கும் வலிமை பெற்றுள்ளதாக கூறிய பிரதமர் மோடி, உள்ளூர் தயாரிப்புகளுக்கு குரல் கொடுப்போம் என்பதே இனி நாம் உச்சரிக்கவேண்டிய தாரக மந்திரம் என்று தெரிவித்தார்.

வைரஸ் பாதிப்புக்கு மத்தியிலும் சுயசார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கி நகர்ந்து செல்கிறோம் என்றும். சுயசார்பு என்பது இன்றைய சூழலில் கட்டாயமாகிவிட்டது என்றும் அவர் கூறினார். வைரஸ் தடுப்பு மருந்து விரைவில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வோம் என்று கூறிய பிரதமர், 3 தடுப்பு மருந்து பரிசோதனைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக தெரிவித்தார். விவசாயிகளின் செலவுகளை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், விவசாயி தயாரிப்புகளை பன்னாட்டு சந்தைக்கு கொண்டு செல்வதுடன், விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி  குறிப்பிட்டார்.

Categories

Tech |