தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டை மீறி வருவதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் கவலை தெரிவித்திருக்கின்றன.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் முதன் முதலாக தென்கொரியாவில் தான் பரவத் தொடங்கியது. அந்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் தினம்தோறும் 900 பேர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகினர். அதனால் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பதன் மூலம் தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கமாக குறைந்து இருந்தது. அதன் பின்னர் சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மே மாதத்தில் இருந்து முழுவதுமாக தளர்த்தப்பட்டன. ஆனால் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்ததால் அந்நாட்டில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியது.
இந்நிலையில் தென்கொரியாவில் தற்போது கொரோனா பாதிப்பு கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையை எட்டி இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு நாளொன்றுக்கு 100 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 103 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 166 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அந்நாட்டில் கடந்த மார்ச் 11-ஆம் தேதிக்கு பின்னர் ஒரே நாளில் பதிவான அதிக பாதிப்பு எண்ணிக்கை இதுவே ஆகும். அதன் காரணமாக தென் கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டை மீறாத அரசு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். நேற்றைய பாதிப்புடன் சேர்த்து தென்கொரியாவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,039 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 305 ஆக இருக்கின்றது.