Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் தீர்மானம் நிராகரிப்பு… ஐநா பாதுகாப்பு கவுன்சில்…!!!

ஈரான் மீதான ஆயுத தடையை நீட்டிக்க கோரும் அமெரிக்காவின் தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்துள்ளது.

மேற்கு ஆசிய நாடான ஈரான் அதிக அளவிலான அணு ஆயுதங்களை பயன்படுத்தி உலக நாடுகள் அனைத்திற்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. அதன் காரணமாக கடந்த 2010ஆம் ஆண்டு ஈரான் மீது ஐநா ஆயுத தடையை விதித்திருந்தது. அதன் மூலம் ஈரான் வெளிநாடுகளில் இருந்து போர் விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்கள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்குவதற்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அணு ஆயுதங்கள் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையில் கடந்த 2014 ஆம் ஆண்டு அணு சக்தி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியது. அந்த ஒப்பந்தத்தில் ஈரான் மீதான ஆயுத தடை 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடையும் என்று ஐநா உத்திரவாதம் அளித்திருந்தது.

அதன்பிறகு அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018 ஆம் ஆண்டு தானாகவே வெளியேறிச் சென்றது. அந்த விவகாரத்தில் ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் பெரும் மோதல் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஈரான் மீதான ஐநா ஆயுதத் தடை வருகின்ற அக்டோபர் மாதம் முடிவடையும் நிலையில், அந்தத் தடையை காலவரையின்றி நீட்டிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி இருக்கிறது. அது தொடர்பாக 15 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு உள்ள ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. ஆனால் அந்தத் தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பு நாடுகளான சீனா மற்றும் ரஷ்யா கடுமையாக எதிர்த்தன.

அதன் பின்னர் இந்தத் தீர்மானம் ஒரு வேளை நிறைவேறினால் தங்களின் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை நிராகரித்து விடுவோம் என்று அந்த இரு நாடுகளும் கூறின. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அது நிறைவேற்ற வேண்டுமானால் 15 உறுப்பு நாடுகளில் ஒன்பது நாடுகள் அந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். இந்நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டம் நேற்று காணொலிக் காட்சி மூலமாக நடந்தது. அந்தக் கூட்டத்தில் ஈரான் மீதான ஆயுத தடை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீது ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அமெரிக்கா மற்றும் டொமினிகன் குடியரசு ஆகிய இரு நாடுகளும் தீர்மானத்திற்கு ஆதரவு வாக்களித்துள்ளன.

சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் அந்த தீர்மானத்தை எதிர்த்து தெரிவித்து வாக்களித்துள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 8 நாடுகள் வாக்களிக்கவில்லை. அதனால் போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் அமெரிக்காவின் அந்த தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்துவிட்டது. இது பற்றி அமெரிக்க வெளியுறவு மந்திரி பாம்பியோ கூறுகையில், ” ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுவதற்கான பொறுப்பு இருக்கின்றது. ஆனால் அது அதன் அடிப்படை பணியை நிலைநிறுத்துவதில் தோல்வியடைந்து விட்டது. ஈரான் மீதான 13 ஆண்டுகால ஆயுதப் தடையை நீடிப்பதற்கான ஒரு நியாயமான தீர்மானத்தை நிராகரித்ததுடன், கடந்த 10 ஆண்டுகளில் முதன் முறையாக உலகின் முன்னணி பயங்கரவாத ஆதரவாளரான ஈரான் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் ஆயுதங்களை வாங்கவும், விற்கவும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வழிவகுத்திருக்கிறது.

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் அதன் பணியை செய்ய தவறிவிட்டது. அதனை ஒரு போதும் மன்னிக்க முடியாது” என்று அவர் கூறியுள்ளார். மேலும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்த நடவடிக்கையால் கடும் அதிர்ச்சியும், மும்பை அடைந்திருக்கிற அமெரிக்க ஜனாதிபதி தலைமையிலான நிர்வாகம் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு முன்னதாக ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகள் அனைத்தையும் மீட்டெடுக்க கூடிய முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தகவலை ஐநாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர தூதர் கெல்லி கிராஃப்ட் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |