பாஜக மாவட்ட மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் காணொளி மூலம் நடைபெற்றது. பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், தமிழகத்தில் வரக்கூடிய சட்டப்பேரவை தேர்தலில் கட்சி நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும். கருத்து வேறுபாடுகள் களைந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். தங்களுடைய எண்ணம் அனைத்துமே சட்டப்பேரவைக்கு எம்எல்ஏக்களை தங்கள் மாவட்டதிலிருந்து அனுப்ப வேண்டும்.
குறிப்பாக எந்த ஒரு மாவட்டத்தில் இருந்து எம்எல்ஏக்களை தேர்ந்தெடுத்து அனுப்பினார்களா ? அந்த மாவட்டத்துக்கு தலைவருக்கு இனோவா கார் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். நிர்வாகிகள் பேசும் போது தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும். நாம்தான் ஒரு ஆக்கபூர்வமான சக்திகளையும், கூட்டணிக்கான மாற்றத்தையும் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
ஆறு மாதத்தில் தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் நாம் கைகாட்டும் கட்சி தான் ஆட்சி அமைக்கும் என்று எல் முருகன் நிர்வாகிகளிடம் பேசினார்.