Categories
மாநில செய்திகள்

என்னோட நம்பர் இருக்கு…. என்கிட்ட சொல்லுங்க…. கிரண்பேடி கருத்து….!


புதுவை கவர்னர் கிரன்பேடி மருத்துவர்கள் பாதுகாப்பாக இருக்க நான் விரும்புகிறேன் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

உயர் அதிகாரிகளைக் கொண்ட பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களை புதுவை கவர்னர் கிரண்பேடி வைத்துள்ளார். அதன் மூலம் அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சமீபத்தில் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் முகாமிற்கு சென்று கிரண்பேடி மருத்துவ அதிகாரிகளை திட்டியதாக கூறப்படுகிறது. சமூகவலைத்தளங்களில் இதுதொடர்பான வீடியோக்கள் பரவியது. கவர்னரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்டர்கள் பலர் கவர்னரின் வாட்ஸ்அப் குழுவில் இருந்து வெளியேறி உள்ளனர்.

புதுச்சேரி அரசு விழாவில் ஆளுநர் ...

இதுகுறித்து கவர்னர் கிரண்பேடி சமூகவலைத்தளத்தில் “தங்களிடம் வரும் அதிக நோயாளிகளை கவனிப்பதால் மருத்துவர்களுக்கு பெரிய அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்பதை நான் கேள்விப்படுகிறேன். உங்களுக்கு உதவியாக இருக்க பலமுறை நான் உங்களிடம் கருத்து கேட்கிறேன். இருப்பினும் ஒரு சிலர் மட்டுமே பதில்களை பகிர்கிறார்கள். அவை உடனடியாக செயல்படுத்தப்படுகிறது.உங்களுக்காகத்தான் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சந்தேகமான கேள்விகளை நீங்கள் குழுவில் அனுப்ப இயலவில்லை என்றால் குழுவில் உள்ள எனது எண்ணுக்கு அனுப்புங்கள். அதற்கான 100% ரகசியத் தன்மைக்கு நான் உறுதியளிக்கிறேன். உங்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வேன். நீங்கள் பாதுகாப்பாக இருக்கவே நான் விரும்புகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |