Categories
தேசிய செய்திகள்

கோழிக்கோடு விமான விபத்து : சிபிஐ விசாரணை கோரி வழக்கு…!!

கேரளாவில் விமான விபத்து நடைபெற்ற கோழிக்கோடு விமான நிலையத்தை உடனடியாக மூட கோரி கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வந்தே பாரத் திட்டத்தில் துபாய்யில் இருந்து கேரளா சென்ற  விமானம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது, ஓடுதளத்தில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள, விமான விபத்து விசாரணை முகமே  என்ற 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு விசாரணையைத் தொடங்கி உள்ள நிலையில், விமான விபத்து நடைபெற்ற கோழிக்கோடு விமான நிலையத்தை உடனடியாக மூட உத்தரவிடக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் விபத்திற்கான காரணம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

Categories

Tech |