இயக்குனர் செல்வராகவன் “சாணி காகிதம்” என்ற படத்தில் கதாநாயகராக அறிமுகமாக உள்ளார்.
தனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான “காதல் கொண்டேன்” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதைத்தொடர்ந்து 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே போன்ற படங்களை இயக்கி தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் இயக்குனர் செல்வராகவன் நடிகராக களமிறங்கியுள்ளார்.
இளம் இயக்குனரான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் “சாணி காகிதம்” என்ற படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஸ் நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சுதந்திரதினத்தன்று படக்குழுவினர் வெளியிட்டனர். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் இயக்குனரான அருண் மாதேஸ்வரன் ஏற்கனவே “ராக்கி” என்ற படத்தை இயக்கியுள்ளார். இன்னும் அந்தப் படம் ரிலீஸ் ஆகவில்லை.