Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தியாகத்தலைவி சின்னம்மா பிறந்தநாளையொட்டி அன்னதானம்…!!

திண்டிவனம் நகர கழகம் சார்பில் தியாகத் தலைவி சின்னம்மா பிறந்தநாளை முன்னிட்டு 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர கழகம் சார்பில் தியாக தலைவி சின்னம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு திண்டிவனத்தில் ஏழை எளியோர் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் சுகாதார பணியாளர் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. பாலசுந்திரம், வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. கௌதம் சாகர், வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு. முத்து, மாவட்ட அவைத்தலைவர் திரு. அப்பாஸ் மந்திரி, நகர செயலாளர் திரு. முருகன், வார்டு செயலாளர் திரு. பாபு மேஸ்திரி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |