Categories
சினிமா தமிழ் சினிமா

உங்களைப் போன்ற ஒரு மனிதரை பார்க்கவே முடியாது… கண்கலங்கிய குஷ்புவின் பதிவு…

நடிகை குஷ்பு எஸ்.பி பாலசுப்ரமணியம் போன்று ஒரு மனிதனைப் பார்க்கவே முடியாது என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் அவர் குணமடைய வேண்டும் என்று சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், ரசிகர்கள் என்று பலரும் பிரார்த்தனை செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் எஸ்பிபி குறித்து நடிகை குஷ்புவும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது ” அன்றாட வாழ்வில் எஸ்பிபி சார் நம்முடனே இருக்கிறார். அவர் இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியவில்லை. தினமும் கடவுளைக் கும்பிடுவது போல அவருடைய பாடல்களை கேட்காமல் யாராலும் இருக்கவே முடியாது. என்னைப் பொறுத்தவரை அவர்தான் கடவுள் மாதிரி இருக்காரு. கடவுளுக்கு சமமாக அவரை நான் பார்க்கிறேன். என்னைப்போலவே, இந்த உலகில் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவர் திரும்பி வர வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். எங்களுக்காக அவர் திரும்பி வரணும், பாட்டு பாடணும், அவரை சந்தித்து நான் பேசணும். அவருடைய குரலை கேட்கணும். எஸ்பிபி சார் உங்களுக்காக நாங்க காத்துகிட்டு இருக்கோம். திரும்பி வாங்க. உங்களைப் போன்ற ஒரு சிறந்த மனிதரை பார்க்கவே முடியாது. திரும்பி வாங்க சார்” என்று நடிகை குஷ்பு பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |