புதுக்கோட்டை அருகே கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஒருவரை அடித்துக் கொலை 10 பேர் கொண்ட கும்பலை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.
திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ரகுராமன் என்ற அக்பர் இவருக்கு வேறு சிலருக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிலர் வாங்கி பணத்தை திரும்பி கேட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள செக்லாகுடி கிராமத்திற்கு ரகுமானை கடத்திச் சென்றுள்ளனர். அங்கு அவரை தலைகீழாக கட்டி தொங்க வைத்து அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது.
இதில் ரகுமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அறிந்த கிராம மக்கள் அந்த கும்பலைச் சிறைப்பிடித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கொலையில் ஈடுபட்ட 10 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.