Categories
தேசிய செய்திகள்

“கொரோனா தடுப்பூசி” முதலில் இவங்களுக்கு தான்….. மத்திய அரசு விளக்கம்….!!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி முதலில் முன் களப்பணியாளர்களுக்கு தான் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும்,, சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பல உலக நாடுகளும் கடும் சிரமங்களை சந்தித்து வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் இதை கட்டுப்படுத்த ஒரே வழியாக இருக்கும் என்பதால்,

அதற்கான பணியில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் மூன்று தடுப்பூசிகள் உருவாகி வரும் சூழ்நிலையில், கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் முன் களபணியாளர்களுக்கு தான் தடுப்பூசி முதலில் போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசிக்கான சோதனைகள் வெற்றி பெற்றவுடன் மருத்துவ பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு தான் முன்னுரிமை என்று மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் கூறியுள்ளார். 

Categories

Tech |