Categories
தேசிய செய்திகள்

வாஜ்பாய் குட்டி STORY : காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தம்…. ஐநாவில் பாக்.பிரதிநிதி பதில்….!!

இந்தியா பாகிஸ்தானின் காஷ்மீர் எல்லைப் பிரச்சனை குறித்து ஐநாவில் வாஜ்பாய் கூறிய குட்டி கதை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

காஷ்மீர் எல்லைப் பிரச்சனை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டு காலமாக நடந்து வருகிறது. இது குறித்த விவாதங்கள் ஐநா சபையிலும் அடிக்கடி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், ஐநா சபையில் காஷ்மீர் குறித்த அனல் பறக்கும் விவாதம் ஒன்றில் ஒரு முறை வாஜ்பாய் தனது உரையைத் தொடங்கினார். அதில் ஒரு கதையோடு தனது வாதத்தை முன் வைத்தார் வாஜ்பாய். அந்த கதை என்னவெனில், காஷ்மீர் இந்தியாவுக்கு தான் சொந்தம். ஏன் இதை கூறுகிறேன் என்றால்,

காஷ்யப் இன்னும் ஒரு ரிஷி குளிக்கச் சென்றபோது அவரின் உடைகளை பாகிஸ்தானியர் களவாடிவிட்டனர் என்று தெரிவித்தார். இவர் கதையை தெரிவித்துக் கொண்டிருக்கும் போதே, எதிரே இருந்த பாகிஸ்தான் பிரதிநிதி ரிஷி உடையை திருடிய காலம் குறித்து கேள்வி எழுப்ப, அதற்கு வாஜ்பாயும் பதில் கூற, நீங்கள் குறிப்பிட்டது பொய் நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் பாகிஸ்தானே இல்லை.

பிறகு எப்படி பாகிஸ்தானியர் களவாடி இருக்க முடியும் என்றார். இதையடுத்து வாஜ்பாய் சிரித்தபடியே நான் சொல்ல வந்த விஷயம் முடிந்தது என்றார். ஐநா சபையில் கரவொலி எழுந்தது. அதாவது இந்தியாவிடமிருந்து தான் பாகிஸ்தானே பிரிந்தது. அப்படியிருக்க காஷ்மீர் எப்படி பாகிஸ்தானுக்கு சொந்தமாகும் என்பதுதான் அவர் சொல்ல வந்த அர்த்தம்.

Categories

Tech |