ஆஸ்துமா நோயாளிகளுக்கான சில அறிவுரைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
தற்போது கொரோனா போன்ற சளித்தொல்லையை அதிகம் ஏற்படுத்தக்கூடிய வைரஸ் பிரச்சனைகள் மனிதர்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுகிறது. இது உயிருக்கே ஆபத்தான சூழலை உருவாக்கும் என்பதால், ஆஸ்துமா நோயாளிகள் இதன்மூலம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், பாதிக்கப்படும் நேரத்தில் அவர்களது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் இதற்கு எதிராக வினையாற்றவும் சில அறிவுரைகளை ஆய்வாளர்கள் வழங்கியுள்ளனர். அதன்படி,
ஆஸ்துமா நோயாளிகள் மருந்து மாத்திரைகளை மட்டும் உட்கொண்டால் போதாது, சில வாழ்வியல் மாற்றங்களையும் செய்ய வேண்டும். வயிறு நிரம்பவோ, வெறும் வயிற்றிலோ இருக்கக்கூடாது. அளவான உணவு அவசியம். தூதுவளை அதிகம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். மஞ்சள், மிளகு, பனங்கற்கண்டு ஆகியவற்றை பாலில் காய்ச்சி தினமும் குடிக்க வேண்டும். காலையில் மூச்சு பயிற்சி நல்ல பலனைத் தரும் என தெரிவித்துள்ளனர்.