Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் 1,102 பேருக்கு கொரோனா உறுதி… தெலுங்கானா மக்கள் அச்சம்…!!!

தெலுங்கானாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 1102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை தடுக்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மாநிலத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில் தெலுங்கானாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 1,269 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

அதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 91,361 ஆக அதிகரித்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் இன்று 9 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 693 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 1,930 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 68,126 ஆக அதிகரித்துள்ளது. அது மட்டுமன்றி 22,542 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |