Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவில்…5 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் திறப்பு…!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் 5 மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரபல வைஷ்ணவி தேவி கோவிலுக்கு யாத்திரைக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் திரிகூடமலை பகுதியில் இருக்கின்ற வைஷ்ணவி தேவி கோவிலுக்கான புனித யாத்திரைக்கு கடந்த மார்ச் மாதம் பதினெட்டாம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி அந்தக் கோவில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ரமேஷ் குமார் கூறும்போது, ” வைஷ்ணவி தேவி கோவில் புனித யாத்திரைக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்படுகின்றது.

முதல்வாரத்தில் ஒவ்வொரு நாளும் அதிக பட்சம் இரண்டாயிரம் பேர் மட்டுமே யாத்திரை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுள் வெளி மாநிலத்தை சேர்ந்த 100 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். ஒரு வாரத்திற்குப் பின்னர் நிலைமை ஆய்வு செய்து, அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |