போட்டோஷாப் செயலியின் புதிய தொழில்நுட்பம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
இல்லாத கற்பனைகளை எடிட் மூலம் உருவாக்கி அதனை நம்ப வைக்கும் விதமாக பல தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டன. இதனை பலர் நல்ல காரியங்களுக்காகவும், சிலர் மிகவும் கீழ்த்தரமான, மோசமான காரியங்களுக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல போட்டோ எடிட் செயலியான அடோப் போட்டோஷாப் செயலியில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் ஒரு புகைப்படம் எடிட் செய்யப்பட்டு இருக்கிறதா? இல்லையா? என்பது தெரிவிக்கப்படும். இதன் மூலம் இணைய தளங்களில் வரும் போலி புகைப்படங்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.