Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு… லாபம் இருமடங்காகும்…நற்செய்திகள் கிடைக்கும்…!

மகர ராசி அன்பர்களே …!   இன்று லாபம் இருமடங்காக இருக்கும். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி பாராட்ட கூடும். பொன் பொருள் வாங்க போட்ட திட்டங்கள் நிறைவேறும். குழந்தைகளின் கல்வி நடத்தை மிகவும் நன்றாகவே இருக்கும். ஆனால் பிள்ளைகளின் பற்றிய கவலை மற்றும் இருந்து கொண்டே இருக்கும். பொன் பொருள் ஆபரண சேர்க்கையும் உண்டாகும். வியாபாரிகளுக்கு வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் கைகூடிவரும்.

மகிழ்ச்சி தரும் தகவல்களும் நல்லபடியாக வந்து சேரும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். செலவை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். சிக்கனத்தை கண்டிப்பாக கடைபிடியுங்கள். சேமிக்கக்கூடிய எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். காதலர்களுக்கு இன்று எந்த விதத்திலும் முன்னேற்றம் இருக்கும். திருமண முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் மிகவும் சிறப்பாக நடக்கும்.
அதே போல அனைவரிடமும் கொஞ்சம் அன்பாக பேசுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். வாடிக்கையாளரிடம் கூடுமானவரை அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ஒரு ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்ட திசை: வட கிழக்கு

அதிஷ்ட எண்கள்:  5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |