Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…ஆர்வம் அதிகரிக்கும்…தடைகள் விலகும்…!

கும்ப ராசி அன்பர்களே …!   இன்று நீங்கள் வருமானம் வரும் வழியை கண்டு கொள்ளும் நாளாக இருக்கும். தடைபட்டு ஒப்பந்தங்கள் தானாகவே நடைபெறுவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள். வீட்டு உபயோக பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டாகும். இன்று நண்பர்களுக்குள் விரோதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருங்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு நல்ல விதமாக கைகூடும். சந்தான பாக்கியம் இன்று கிடைக்கும்.

உங்களது யோசனைகளை மற்றவர்கள் கேட்டும் அனுசரித்துச் செல்வார்கள். தூரதேசத்திலிருந்து நல்ல தகவல்கள் இருக்கும். வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று எப்படிப்பட்ட காரியத்தையும் நீங்கள் திறம்பட செய்து கொடுப்பீர்கள். சமூக அக்கறையுடன் இன்று அனைத்து விஷயங்களிலும் ஆர்வம் இருக்கும். பொது நலக் காரியங்களில் ஆர்வம் செல்லும். வருமானத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

அக்கம் பக்கத்தினரிடம் மட்டும் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். யாரிடமும் வாக்குவாதங்கள் மட்டும் செய்ய வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளமஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |