Categories
உலக செய்திகள்

தினமும் 10,000 கொரோனா பாதிப்புகளை சந்திக்கும் 4 நாடுகள்… பட்டியலை வெளியிட்ட உலக சுகாதார நிறுவனம்…!!!

தினம்தோறும் 4 நாடுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தற்போது சீனாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் மற்ற உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. அந்தவகையில் தினம் தோறும் நான்கு நாடுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் இந்தியா பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொலம்பியாவில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது. தினந்தோறும் ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகின்ற நாடுகளின் பட்டியலில் லத்தீன், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகள் இருக்கின்றன. பெருவில் 9,441, அர்ஜெண்டினாவில் 7,498, மெக்சிகோவில் 7,231, சிலியில் 2,077, பொலிவியாவில் 1,388, டொமினிக் குடியரசில் 1,354, வெனிசூலாவில் 1,281, கவுதமாலாவில் 1,144, கோஸ்டா ரிக்காவில் 1,072, பனாமாவில் 1,069, ஈக்குவடாரில் 1,066 பேருக்கு பாதிப்பு பதிவாகிறது.

ஐரோப்பாவில் ஸ்பெயினில் 5,479, ரஷியாவில் 5,061, பிரான்சில் 2,667, உக்ரைனில் 1,847, இங்கிலாந்தில் 1,440, ஜெர்மனி, ருமேனியாவில் தலா 1,415 பேருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. ஆசியாவில் பிலிப்பைன்சில் 6,134, ஈராக்கில் 4,013, ஈரானில் 2,501, வங்காளதேசத்தில் 2,766, இந்தோனேசியாவில் 2,307, கஜகஸ்தானில் 1,847, சவுதி அரேபியாவில் 1,383, ஜப்பானில் 1,360, துருக்கியில் 1,226 பேருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. ஆப்பிரிக்காவில் தென் ஆப்பிரிக்கா, மொராக்கா, எத்தியோப்பியா ஆகியவற்றில் தலா ஆயிரம் முதல் 10 ஆயிரத்துக்கு இடையே கொரோனா பாதிப்பு பதிவாகின்றன. இந்த புள்ளி விவரங்களை உலக சுகாதார நிறுவனம் அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |