ராணுவ இந்தியாவின் தேசிய கீதத்தை அமெரிக்காவில் இசைத்த காட்சி வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா தனது 74-வது சுதந்திர தினத்தை வெகுவாக கொண்டாடியது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வழக்கமான ஆரவாரமில்லாமல் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இடையே ராணுவம் இந்தியாவின் தேசிய கீதத்தை இசைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. வைரல் வீடியோவை ஆய்வு செய்து பார்த்த போது, அது சென்ற 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் என தெரியவந்து உள்ளது. உண்மையில் இந்த வீடியோவனது அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே கூட்டு ராணுவ பயிற்சியின் போது எடுக்கப்பட்டது.
ஆனால் இந்த வீடியோ காட்சிகள் இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகி அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் வைரல் பதிவுகளில் கூறப்படுவது போன்று இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க ராணுவம் இந்திய தேசிய கீதத்தை இசைக்கவில்லை என உறுதியாகி விட்டது. போலி செய்திகளை பரப்ப வேண்டாம். இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நடைபெற்று இருக்கின்றன.