Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாலை அமைப்பதற்காக சாலையை பெயர்த்துப்போட்ட ஒப்பந்ததாரர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய சாலை அமைப்பதற்காக சாலையில் பெயர்த்துப்போட்ட ஒப்பந்ததாரர் ஒருவர், மீண்டும் சாலையை அமைக்காததால் கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே பிபியேந்தல் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட வீடுகளில் 1000திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு கீழ் பிபியேந்தல் கிராம சாலையை புதுபிக்க முடிவு செய்யப்பட்டது. பிபியேந்தல் கிராமத்தில் இருந்து மீனாட்சிபுரம் என்ற கிராமம் வரை 2 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்க, 55 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கீழபருத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர், இயந்திரம் மூலம் தார்சாலை  பெயர்த்ததால் கிராம மக்கள் பலரும் இப்பாதையை கடக்க முடியாமல் கடந்த ஓராண்டாக சிரமப்பட்டு வருகின்றனர். விரைவாக சாலை பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரி பிபியேந்தல் கிராம மக்கள் கைகளில் கருப்புக்கொடி ஏந்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Categories

Tech |