Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எங்கிருந்தோ பறந்து வந்த மாஞ்சா நூல்…. இரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதி …!!

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்த மாஞ்சா நூல் பெண்ணின் கழுத்தில் அறுபட்டு படுகாயம் அடைந்துள்ளார்.

சென்னை எண்ணூர் சத்யமூர்த்திநகர் அருகே உள்ள முதல் தெருவைச் சேர்ந்தவர் ரமணி. இவரது வயது 35. இவர், ராயபுரத்தியில் எம்.சி.ரோட்டில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது தோழியின் பெயர் ரேவதி அவருக்கு 33 வயது ஆகிறது. 2 நாட்களுக்கு முன்பு மாலையில் இருவரும் சேர்ந்து வேலை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுற்க்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது வாகனத்தை ரமணி ஓட்டினார். அவருக்கு பின்னால் ரேவதி அமர்ந்து கொண்டு இருந்தார்.

எண்ணூர் தீயணைப்பு நிலையத்தின் அருகே சென்று கொண்டிருந்த இவர்கள் மீது எங்கிருந்தோ காற்றில் பறந்து கொண்டிறிருந்த காற்றாடியின் மாஞ்சாநூல் இரு சக்கர வாகனத்தை நோக்கி வந்து ரமணியின் கழுத்தை அறுத்தது. இதில் நிலைதடுமாறிய ரமணி இரு சக்கர வாகனத்துடன் கீழே விழுந்தார். இதில் பின்னால் அமர்ந்து கொண்டிருந்த ரேவதியும் ரமணியுடன் சேர்ந்து கீழே விழுந்தார்.

மொபட்டில் சென்றபோது மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து பெண் படுகாயம்

இதில் அவரது கையில் எலும்பு முறிந்து  படுகாயம் ஏற்பட்ட ரமணி, ரேவதி இருவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைதொடர்ந்து எண்ணூர் போலீசார்  வழக்குப்பதிவை விசாரணை செய்து வருகிறார். மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து எண்ணூர், சாத்தாங்காடு, மணலி ஆகிய பகுதிகளில் உள்ள காற்றாடி, மாஞ்சாநூல்  விற்பனை செய்தவர்களில் 28 பேரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |