நியூசிலாந்தில் வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த பொதுத்தேர்தல் கொரோனா அச்சம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து 702 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில், தற்போது அந்த நாட்டின் மிகப் பெரிய நகரான ஆங்லாந்தில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் மீண்டும் பொது முடக்க கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா பற்றிய அச்சம் மக்களிடையே மீண்டும் ஏற்பட்டுள்ளதால், அந்த நாட்டில் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெற இருந்த பொதுத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி வரையில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா கூறியுள்ளார். கொரோனா அச்சம் காரணமாக அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை கைவிட்டுள்ளன. இந்நிலையில் தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயத்திற்கு நியூசிலாந்து பிரதமர் ஆளாகியுள்ளார். 120 உறுப்பினர்களைக் கொண்ட நியூஸிலாந்து பொதுத் தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜெசிந்தாவுக்கே மீண்டும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.