Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை… புதிய தளர்வு அமல்..!!!

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை பல்வேறு தளர்வுகளுடன் இன்று அமலுக்கு வந்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும் முறை அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு விண்ணப்பித்தால் உடனடியாக இ பாஸ் கிடைக்கின்றது. திருமணம் போன்ற காரணத்திற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் விண்ணப்பித்த நபர்களுக்கு இ பாஸ் கிடைத்துள்ளது.

விண்ணப்ப காரணங்களில் புதிதாக எதுவும் சேர்க்கப்படாத நிலையில் உடனடியாக இ- பாஸ் கொடுக்கப்படுகிறது. ஆதார் அல்லது ரேஷன் அட்டை விபரங்களுடன் தொலைபேசி எண்ணையும் இணைத்து விண்ணப்பித்தால் இ-பாஸ் உடனடியாக கிடைக்கும். இரண்டு நாட்கள் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒருநாள் மட்டுமே இ-பாஸுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |