Categories
தேசிய செய்திகள்

நேபாள நிலச்சரிவு… புதையுண்ட 21 பேர்… மீட்பு பணி தீவிரம்…!!!

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான சரிவில் சிக்கி தற்போது வரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேபாள நாட்டில் பருவமழை தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் சில நாட்களாகவே பெய்து கொண்டிருக்கும் கன மழையால் சாலை முழுவதும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் தற்போது வரை மீண்டு வராத நிலையில், கன மழை மற்றும் வெள்ளத்தினால் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழை நீரில் மக்கள் நீந்தி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் முழுவதும் வெள்ளநீர் தேங்கி இருப்பதால் வாகன போக்குவரத்தை முழுவதுமாக முடங்கியுள்ளது.

அதுமட்டுமன்றி கனமழையால் நிலச்சரிவு சம்பவங்களும் அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றன. நேபாளத்தின் வடக்கு மத்திய பகுதியில் அமைந்த சிந்துபால்சோக் நகரில் லிடிமா லாமா டோல் மற்றும் ஜீகல் கிராமப் பகுதியில் கடந்த 17ஆம் தேதி அன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் 37 வீடுகள் இடிந்து விழுந்தன. அது பற்றி தகவல் அறிந்த நேபாள ராணுவம், ஆயுத காவல்படை மற்றும் நேபாள காவலர்கள் என 150 பாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவ் பிரசாந்த் கூறுகையில்,” கடந்த 14ஆம் தேதி 11 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 15- ஆம் தேதி 2 குழந்தைகள் உட்பட ஏழு உடல்கள் மீட்கப்பட்டன. தற்போது வரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் மண்ணுக்குள் சிக்கியுள்ள 21 பேரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். மழைப்பொழிவு உள்ளதால் மீட்புப்பணி பகலில் மட்டுமே நடைபெறுகிறது” என்று கூறியுள்ளார். தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதி அதிகம் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள மலைப்பகுதி ஆகும். அங்கு வசித்து வரும் மக்களை வேறு பகுதிக்கு மாற்றுவதற்கு நேபாள மறுசீரமைப்பு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. நேபாளத்தில் பெய்து கொண்டிருக்கும் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவு களால் கடந்த ஜூலை மாதம் இறுதியில் 113 பேர் பலியாகியுள்ளனர். 67 பேர் காயமடைந்த நிலையில், 38 பேரை காணவில்லை என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Categories

Tech |