மொரீசியஸ் நாட்டில் கப்பலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாக இந்தியா நாட்டிற்கு விமானம் மூலம் உதவியுள்ளது.
வகாஷியோ கப்பல் உடைந்து இந்தியப் பெருங்கடலில் டன் கணக்காக டீசல் மற்றும் எண்ணெய் கசிந்து வருகிறது. இதன் விளைவாக மொரீஷியஸ் தீவு மிகப்பெரிய சுற்றுச்சூழல் அவசரநிலையை எதிர் கொண்டுள்ளது. டன் கணக்கிலான எண்ணெய் கடலில் கலந்து விட்ட நிலையில், தொடர்ந்து சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வழங்கினார்.
இதற்காக, மொரீஷியசுக்கு இந்திய அரசு உதவிப்பொருட்களை அனுப்பி இருக்கிறது. இந்தியக் கடலோர காவல் படையில் இருந்து 10 நபர்கள் அடங்கிய குழுவையும், 10,000 எண்ணெய் உறிஞ்சும் பேடுகள் உள்ளிட்ட 30 டன் எடையிலான தொழில்நுட்ப உபகரணங்களையும் இந்திய அரசு அனுப்பியுள்ளது. மொரீஷியஸ் அரசின் கோரிக்கைக்கு இணங்க, இந்திய விமானப் படையின் சி17 க்ளோப்மாஸ்டர் விமானத்தில் இத்தகைய உதவிப் பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டன.