Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு உத்தரவை காற்றில் பறக்கவிட்ட பொதுமக்கள் ….!!

தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக முக்கியச் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுபடுத்த இம்மாத ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி ஞாயிற்றுக் கிழமையான இன்று மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால்  தலைநகர் சென்னையில் உள்ள அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைககள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

இதேபோல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வந்த பொதுமக்களை சோதனை செய்த பின்னரே போலீசார் அனுமதித்தனர்.

Categories

Tech |