சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாமியான பந்தல், மைக் செட் உள்ளிட்ட ஏற்பாடுகளுடன் நாளை டாஸ்மாக் திறப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவியதையடுத்து சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து அணைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் இயங்கி வந்தன. தற்போது சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் அங்கு மதுக்கடைகள் திறப்பதற்கு நேற்று அனுமதியளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாளை சாமியானா பந்தல், மைக்செட் போன்ற ஏற்பாடுகளுடன் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதோடு டாஸ்மாக் கடையில் கிரில் பகுதியை தவிர்த்து மற்ற இடங்களில் நெகிழியால் செய்யப்பட்ட தடுப்பு அமைக்க தமிழக அரசு அறிவுறுத்தியதோடு நாளொன்றுக்கு 500 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனாலும் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கடைகள் திறக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.