நாகப்பட்டினம் மாவட்டத்தில் நீதிமன்ற ஊழியர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை 1,570 நபர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இதில் 16 நபர்கள் உயிரிழந்த நிலையில் 865 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 689 பேர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கும் நிலையில், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள, மாவட்ட அமர்வு நீதிமன்றம், மாற்று தீர்வு மையம், குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடங்கள், அலுவலக அறைகள் முழுவதும் இன்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டு நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகள், வழக்கறிஞர்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.