சென்னையில் வரும் 18-ம் தேதி முதல் டாஸ்மார்க் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் டாஸ்மார்க் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வரும் 18-ம் தேதி முதல் மது கடைகள் திறக்கப்படும் என்றும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே மது கடைகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கடையில் நாளொன்றுக்கு 500-டோக்கன்கள் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மது வாங்க வருவோர் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.