Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் வாங்க ஆளின்றி அழுகும் அன்னாசி, பலாப்பழங்கள் ..!!

கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் யாரும் வராததால் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் இயங்கிவந்த பழ சந்தை முழுவதுமாக மூடப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுலாத் தலமான கொல்லிமலை கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரம் கொண்டது. இயற்கை சூழல் மிகுந்த இந்த பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். அப்போது இந்த பகுதியில் விளைந்த அன்னாசி, பலாப்பழம் உள்ளிட்ட பழங்களை சுற்றுலாப்  பயணிகள் வாங்கிச் செல்வர். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் யாரும் வராததால் வாங்க ஆளின்றி அங்குள்ள பழச்சந்தை கலை இழந்தது. அங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் பழங்கள் அனைத்தும் அழகி வீணாகும் நிலை ஏற்பட்டது. மேலும் அவற்றிற்கு போதிய விலை கிடைக்காத நிலையில் இருந்து வருவதால் பழச்சந்தை முற்றிலுமாக மூடப்பட்டது.

Categories

Tech |