Categories
உலக செய்திகள்

தலிபான்களை விடுவிக்க வேண்டாம்… ஆப்கான் அரசிடம் கோரிக்கை விடுத்த பிரான்ஸ்…!!!

பிரான்ஸ் குடிமக்களை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் தலிபான்களை விடுவிக்க கூடாது என்று ஆப்கான் அரசிடம் பிரான்ஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் சிறைகளில் இருக்கின்ற தலிபான் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அமெரிக்க அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. அதன்பின்னர் ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5000 தலிபான் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தனர். அதனைப் போலவே ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகள், அரசு பாதுகாப்பு படையினர் ஆயிரம் பேரை தலிபான்கள் அமைப்பு விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த ஒப்பந்தத்தின்படி ஆப்கானிஸ்தான் அரசே நடந்துகொள்ளவேண்டும் என்று அமெரிக்க அரசும், தலிபான்கள் ஆப்கானிஸ்தான் அரசுக்கு நிர்பந்தம் செய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அரசே தலிபான் கைதிகளை விடுதலை செய்துள்ளது. இன்னும் மீதமுள்ள 400 தலிபான் கைதிகள் கடுமையான குற்றங்களை செய்து இருப்பதால் அவர்களை விடுதலை செய்யவில்லை. இந்தநிலையில் பிரான்ஸ் குடிமக்களை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட தலிபான்களை ஆப்கானிஸ்தான் விடுவிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கைதிகளை விடுவிக்க கூடிய ஒப்பந்தத்தில் பிரான்ஸ் குடிமக்களை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தலிபான் போராளிகளை சேர்க்க வேண்டாம் என்று பிரான்ஸ் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. பிரான்ஸ் நாட்டினருக்கு எதிரான பல்வேறு குற்றங்களில் தண்டனை பெற்ற நபர்களின் விடுதலையை பிரான்ஸ் கடுமையாக எதிர்த்து கொண்டிருக்கிறது என கூறப்படுகிறது.

Categories

Tech |