Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ராசிபுரத்தில் குடிநீர்த் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி ….!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குடிநீர் தொட்டியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். 3 பேரும் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராசிபுரம் அருகே பட்டணம் முனியப்பன் பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் புதிதாக வீடு கட்டி வருகிறார். இங்கு கான்கிரீட் குடிநீர் தொட்டி கட்டி பல நாட்கள் ஆன நிலையில் அதிலிருந்த முட்டைகளை அகற்றும் பணியில் கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தொட்டியில் இறங்கி 5 தொழிலாளர்ககளும் விஷவாயு தாக்கி மயங்கி கீழே விழுந்தனர்.

இதில் முருகேசன், சஞ்சய் ஆகிய இரு தொழிலாளர்கள் மயக்கமடைந்து உயிரிழந்தனர். தவமுருகன், சிரஞ்சிவி, ஆறுமுகம் ஆகியோர் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவம் குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |