தங்களின் பாதுகாப்பு நிறுவனங்கள் மீது வடகொரியா தொடுத்த சைபர் தாக்குதலை மிகத்துல்லியமாக முறியடித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
வடகொரியா ராணுவத்தின் உளவு அமைப்பான லாக் 110 கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் லாசரஸ் என்ற குழு இஸ்ரேல் மீது சைபர் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் தங்களின் பாதுகாப்பு நிறுவனங்கள் மீது வடகொரியா தொடுத்த சைபர் தாக்குதலை மிகத் துல்லியமாக முறியடித்து விட்டோம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. இஸ்ரேலில் இருந்து திருடப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் வடகொரியா தனது தோழமை நாடான ஈரானுக்கு அளிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. உலகின் 150 நாடுகளில் 300000 கணினிகளை செயலிழக்கச் செய்த சைபர் தாக்குதலுக்கு பின்னால், கடந்த 2014ஆம் ஆண்டு வங்கதேச தேசிய வங்கியில் இருந்து 81 மில்லியன் டாலர்களை கொள்ளையடித்தது இவர்களை என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு பிரபல திரைப்பட நிறுவனம் மீது சைபர் தாக்குதல் நடத்தியதும், அங்கே இருந்த முக்கிய ஆவணங்கள் அனைத்தும் திருடியது மட்டுமல்லாமல் திரைப்படங்கள் சேமிக்கப்பட்டிருந்த இரண்டு கணினிகளை சேதப்படுத்தியது இவர்களே என்று கூறப்படுகின்றது. இந்தக் குழுவில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். தினம்தோறும் வலிமை பெற்று வருவதற்கு சாட்சியமாக இஸ்ரேல் மீதான இந்த தாக்குதலை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இஸ்ரேல் மீது கடந்த ஜூன் மாதம் லாசரஸ் குழு தாக்குதலை நடத்தியது. முக்கிய தகவல்கள் அனைத்தையும் அதிகாரிகளிடம் இருந்து சேகரித்த பிறகு, மின்னஞ்சல் முகவரியும் தொலைபேசி இலக்கமும் கேட்டுள்ளனர். இந்த தகவல் இஸ்ரேல் அதிகாரிகளால் பகிரப்பட்டு வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.