கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் குறித்து மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என்று மத்திய அரசு வழிகாட்டியுள்ளது. இருந்தும் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே அதிகம் தொற்று கொண்ட இரண்டாவது மாநிலமாக தமிழகம் இருந்து வருகின்றது.
இந்நிலையில் அண்டை மாநிலமான புதுச்சேரி முழுவதும் நாளை காலை 6 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கிற்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். மருந்து கடைகள், பால் நிலையன்கள் தவிர கடைகள் செயல்படாது என அவர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரிப்பதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்