இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனியினுடைய போட்டோவை மணலில் வரைந்து ரசிகர் ஒருவர் அசத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது ஓய்வை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் தோனியின் இரண்டாவது இன்னிங்ஸிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கடந்த 16 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டில் தோனி படைத்த சாதனைகளுக்காக ரசிகர்கள் என்ற ஹேஷ்டேக்கில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தோனியின் ரசிகரும் மணல் ஓவியக் கலைஞருமான மனஸ் சாஹு, உலகக்கோப்பையுடன் தோனி இருப்பதுபோல் மணலைக் கொண்டு வரைந்து நன்றி தெரிவித்துள்ளார். இந்த சாண்ட் ஆர்ட் அனிமேஷன் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.