Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனியின் சாதனை” இதை யாராலும் முறியடிக்க முடியாது…. கௌதம் கம்பீர் உறுதி….!!


தோனியின் சாதனைகளில் 3 ஐசிசி ட்ராபிகளை வென்ற சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

இந்திய அணியின் சாதனையை கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து நேற்றுமுன்தினம் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 3 ஐசிசி டிராபிகளை வென்ற கேப்டன், அதிகமுறை நாட் அவுட் கேப்டன், அதிக போட்டிகளில் விளையாடிய கேப்டன் என்று பல சாதனைகள் படைத்தவர். ஐ சி சி மூன்று டிராபிகள்  வென்ற கேப்டன் என்ற சாதனை எப்பொழுதுமே நிலைத்திருக்கும் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

தலைவனுக்கு கை இரண்டுதான்.. ஆனால் ...

இதுகுறித்து கௌதம் கம்பீர் கூறுகையில் “தோனியின் சாதனை பற்றி நீங்கள் பேசும்போது, 3 ஐசிசி ராசிகளை வென்ற சாதனை எம்எஸ் தோனியுடன் எப்பொழுதுமே இருக்கும். மற்ற எந்த கேப்டனும் இந்த சாதனையை முறியடிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. இது எப்போதும் நிலைத்திருக்கும் என்று என்னால் பந்தயம் கட்ட முடியும். இரட்டை சதம் கூட முறியடிக்கபடலாம். யாராவது ஒரு பேட்ஸ்மேன் ரோகித் சர்மாவை விட அதிக டபுள் செஞ்சுரி அடிக்க வாய்ப்பு உண்டு. ஆனால் எந்த கேப்டனாலும் 3 ஐசிசி டிராபியை வெல்ல முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஆகவே அந்த சாதனையுடன் தோனி எப்பொழுதும் நிலைத்திருப்பார்.” என்று  கூறியுள்ளார்.

Categories

Tech |