இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஓய்வு குறித்த தகவலை முறைப்படி முதலில் எங்களிடம் தெரிவிக்கவில்லை என்று பிசிசிஐ கூறியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து டோனி ஓய்வு பெற்ற அடுத்த சில நிமிடங்களிலேயே சுரேஷ் ரெய்னாவும் ஓய்வை அறிவித்தார். 33 வயதே ஆன சுரேஷ் ரெய்னா இந்தியாவுக்காக 18 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7787 ரன்களை குவித்துள்ளார். மேலும் கிரிக்கெட்டின் அனைத்து பார்மெட்களிலும் சதம் அடித்தவர் இவர்.
சுரேஷ் ரெய்னாவின் ஓய்வு குறித்து பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது அதில் “வீரர்கள் ஓய்வு பெறுவது குறித்து பிசிசிஐயிடம் முதலில் தகவல் தெரிவிப்பது வழக்கம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக ரெய்னா, பொதுவெளியில் அறிவித்த பிறகு பிசிசிஐக்கு தகவல் தெரிவித்தார். குறுகிய காலத்தில் ஓவர் போட்டிகளில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பல இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினார்” என்று பாராட்டியுள்ளது.