Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி – அனுமதி கோரி வழக்கு

பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதித்து தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது. நாடு முழுவதும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் சிலை வைத்து கொண்டாட தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த ஆணையை ரத்து செய்யக்கோரி பாஜகாவை சேர்ந்த வழக்கறிஞர் ராமசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்து அவசர வழக்காக எடுத்து விசாரிக்க நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக மனுவாக தாக்கல் செய்தால் நாளையே விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Categories

Tech |