தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களில் மொத்தம் 5,890 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,43,945 ஆக அதிகரித்தது. 5,667 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,83,937 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 54,122 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 1,185 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,17,839 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 12,003 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 120 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு 5,886 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 65,643 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 36,47,582 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு :
சென்னை-1185
கோவை-393
கடலூர்-390
திருவள்ளூர்-308
தேனி-279
சேலம்-268
செங்கல்பட்டு-224
விருதுநகர்-212
குமரி-209
காஞ்சிபுரம்-174
புதுக்கோட்டை-164
திண்டுக்கல்-154
ராணிப்பேட்டை-151
தென்காசி-147
விழுப்புரம்-138
ஈரோடு-137
மதுரை-136
திருச்சி-121
தஞ்சை-113
நெல்லை-100
தி.மலை-77
அரியலூர் -76
தூத்துக்குடி-75
திருப்பத்தூர்-72
திருவாரூர்- 72
திருப்பூர்-70
நாமக்கல்-65
வேலூர்-63
க.குறிச்சி-54
சிவகங்கை-54
ராமநாதபுரம்- 47
கரூர்-37
பெரம்பலூர்-34
தர்மபுரி-28
நீலகிரி -27
கிருஷ்ணகிரி-14
நாகை-10