சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அணை ஒன்றில் சிக்கிய இளைஞர் பெரும் போராட்டத்திற்கு பிறகு இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார்.
ரத்தன பூர் மாவட்டத்தில் உள்ள குட்டாக்கெட் என்ற நீர்த்தேக்கத்தில் நேற்று மாலை குதித்த இளைஞர் ஒருவர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். பின்னர் மரம் ஒன்றை பிடித்து தொங்கியபடி அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் உள்ளூர்வாசிகள் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினரின் நேற்றைய மீட்பு நடவடிக்கை தோல்வியடைந்தது. இதையடுத்து இன்று அதிகாலை மீட்பு பணியில் விமானப்படையின் mi-17 ரக ஹெளிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டது.
பெரும் வெள்ளத்திற்கு இடையிலும் லாவகமாக ஹெலிகாப்டரை செலுத்திய விமானப்படை வீரர்கள் வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருந்த இளைஞரை மீட்டு கரை சேர்த்தனர். இளைஞர் மீட்கப்படும் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதையடுத்து விமானப்படை வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.