Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் ….. 191,521 பேருக்கு தொற்று”…. உலகை கலங்கடிக்கும் கொரோனா …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 191,521 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்aவில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட மாட்டார்களா ? என்ற உலக மக்களின் எதிர்பார்ப்பு மேலோங்கி கொண்டே இருக்கின்றது. இதனிடையே ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் எடுத்துக் கொண்டிருக்கின்றது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  லட்சக்கணக்கில் சென்று கொண்டிருக்கும் அதே வேளையில் உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.

உலகளவில் 22,036,545 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, 14,778,388 பேர் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் 1.06 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6,481,295 பேரில் அதிகமானோர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 191,521 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, 4,083 புதிதாக பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு :

இந்தியா  : 54,288

அமெரிக்கா : 40,612

பிரேசில் : 23,038

கொலம்பியா : 8,328

ரஷ்யா : 4,892

அர்ஜெண்டினா : 4,557

மெக்சிகோ : 4,448

பிலிப்பைன்ஸ் : 3,314

ஈராக் : 3,202

பங்காளதேஷ்  : 2,595

 

 

Categories

Tech |