துலாம் ராசி அன்பர்களே…! இன்று குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்று நடப்பீர்கள். திட்டமிட்ட பணிகள் கூடுதல் கால அவகாசத்தில் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் குறையும்.வெளியூர் பயணத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். பிள்ளைகளால் உதவிகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளைக் கவனிக்க வேண்டும். கூடுதல் உழைப்பும் ஏற்படும்.
குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழல் இருக்கும். கௌரவம், அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். வீண் அலைச்சலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பொது நலக் காரியங்களில் ஈடுபடும் பொழுது ரொம்ப கவனமாக தான் இருக்க வேண்டும்.
காதலர்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.