அமெரிக்காவில் மதுபோதையில் இருந்த பெண்களை மட்டும் குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் கம்ரான் சையத் (Kamran Syed) என்ற 39 வயதுடைய நபர் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சுற்றியிருக்கும் மதுபான விடுதிக்கு வருகின்ற பெண்களை மட்டும் குறிவைத்து அவர்களை பின் தொடர்ந்து சென்றுள்ளார்..
அதனைத்தொடர்ந்து போதையில் இருக்கும் பெண்களை பெவர்லி ஹில்ஸ் (Beverly Hills) பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.. இப்படி 2017ஆம் ஆண்டிலிருந்தே இந்த ஆண்டு வரையிலும் செய்து வந்துள்ளான் கம்ரான் சையத். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக இதுபோன்று செய்து வந்துள்ளான்..
இந்த சூழ்நிலையில் தான் தலைமறைவாகயிருந்த கம்ரானை கடந்த ஜூன் மாதம் 20ஆம்தேதி போலீசார் கைது செய்தனர்.. இவனை வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.. இதற்கிடையே லாஸ் ஏஞ்சல்ஸில் இது போன்ற மற்ற சம்பவத்திலும் கம்ரானுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.. அவனிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.