Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மசூதிக்கு மந்திரிக்க வந்த போது… “திருமணத்தை மீறிய உறவு”… கழுத்தறுத்து ஏரியில் வீசிய கணவன்… அதிரவைத்த சம்பவம்..!!

குழந்தைக்கு மந்திரிப்பதற்காக வந்த பெண்ணுடன், திருமணத்தை மீறிய உறவு ஏற்பட,  இறுதியில் அது கொலையில் முடிந்திருக்கிறது.. 

இந்த அதிர்ச்சி சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது.. உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் திருநாவலூர் பெரியபட்டு ஏரியில் கடந்த 14-ஆம் தேதி சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தபகுதி மக்கள் உடனடியாக இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த அந்த நபரின் உடல்களில் பல இடங்களில் காயங்களும், கழுத்து பகுதியில் ஆழமான வெட்டுக்காயமும் இருந்ததால், இச்சம்பவம் குறித்து உண்மையை என்னவென்று கண்டுபிடிக்க 5 பேர் கொண்ட ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது..

இந்த சமயத்தில்தான், பண்ருட்டி அருகேயுள்ள எல்.என் புரம் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் காணாமல் போய் விட்டதாக அவரின் மனைவி ஸ்டேஷனில் புகாரளித்தார்.. அவர் கூறிய அடையாளங்களும், சடலமாக கிடந்த நபரின் அடையாளங்களும் சரியாக  ஒத்து போனது.. அதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது பெயர் சதாம் உசேன் என்பதும், அவர் எல்.என் புரம் பள்ளிவாசலில் ஹஜ்ரத் ஆக இருந்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

அவரது செல்போன் எண்ணை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, அன்சாரி என்ற நபர் போலீசாரிடம் சிக்கினார்.. பின்னர் அன்சாரியிடம் விசாரணையை ஆரம்பித்தனர்.. அவர் சொன்ன ஒவ்வொரு விஷயத்தையும் கேட்டு போலீசார் ஆடிப்போய் போய்விட்டனர்..

ஆம் பீகாரை சேர்ந்தவர் அன்சாரி.. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழகம் வந்து வேலை பார்த்து வந்த இவருக்கும் திருமணமாகி குழந்தை ஒன்றும் உள்ளது.. இந்த குழந்தைக்குதான் திடீரென்று உடம்பு சரியில்லாமல் போயிருக்கிறது.. அப்போது மசூதியில் மந்திரிப்பதற்காக குழந்தையை தூக்கிக்கொண்டு அன்சாரியின் மனைவி சென்றுள்ளார்.

அங்கு சதாம் உசேன் என்பவருடன் அன்சாரி மனைவிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.. இவர்களின் நட்பு காலப்போக்கில் மிகவும் நெருங்கி பழகும் அளவிற்கு திருமணத்தை மீறிய தகாத உறவாக மாறியிருக்கிறது.. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்..

சுமார் 5 ஆண்டுகளாக இப்படி இருந்து வந்த நிலையில், இதுபற்றி தெரிந்த அன்சாரி மனைவியை இனி இப்படி நடந்து கொண்டால் அவளவுதான் என்று கடுமையாக கண்டித்துள்ளார்.. ஆனால் அவர் கணவரின் பேச்சை துளியும் கேட்கவில்லை.. தொடர்ந்து காதலனிடம் பேசி கொஞ்சியும்  இருந்து வந்துள்ளார்..

இப்படியே போனால் சரிவராது என எண்ணிய அன்சாரி காதலனான சதாம் உசேனை போட்டுத்தள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி, அவரை ஒரு வாரமாகவே கொலை செய்ய வேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்..

ஆனால், அது எதுவுமே பலன் கொடுக்கவில்லை.. இதனால் நேரடியாக சதாம் எண்ணுக்கு போன் செய்து, எலவனாசூர் கோட்டையிலுள்ள ஒருவருக்கு மந்திரிக்க வேண்டும் என்று கூறி அவரை பைக்கில் அழைத்து வந்துள்ளார்.

அப்போது, திருநாவலூர் பெரியபட்டு ஏரி அருகே பைக் சென்றபோது சதா முசேனை வண்டியை விட்டு கிழே இறங்குமாறு சொல்லிவிட்டு, பின் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு, சடலத்தை அங்கிருக்கும் ஏரியில் வீசியுள்ளார்.

இந்த சம்பவத்தில் அன்சாரிக்கு உதவியாக 3 பேர் இருந்துள்ளனர்.. இதில் அஷ்ரப் அலி, சிறுவன் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்து ஒருவனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |