கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை இந்த முடக்கம் அமல்படுத்த பட்டுள்ளது. மாநிலங்கள் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு முடிவு எடுத்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்திலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 18 ( இன்று) முதல் மது கடைகள் திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகள் இன்று காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும் என்றும், நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது