Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மோசமான சாலையால் விபத்துகள் அதிகரிப்பு ….!!

மோசமான நிலையில் காணப்படும் காரைக்கால் திருமணராயன்பட்டி புறவழிச்சாலையில் அதிக விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடுவதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் முக்கிய சாலையான திருமணராயன்பட்டி புறவழிச்சாலை மூன்று கிலோமீட்டர் தூரத்திற்க்கு அமைந்துள்ளது. இச்சாலை கடந்த சில மாதங்களாக மோசமடைந்த நிலையில் உள்ளது. இதனால் சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது.

மேலும் சாலையில் இரவு நேரத்தில் மின் கம்பங்கள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டு சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |